திருச்சி காவிரி பாலத்தில் வாகனம் செல்ல தடை - காவல்துறை பாதுகாப்பு

திருச்சி காவிரி பாலத்தில் வாகனம் செல்ல தடை - காவல்துறை பாதுகாப்பு

திருச்சி காவிரி பாலம் கடந்த (10.09.22) 10ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மூடப்பட்டது.(11.09.22) 11ஆம் தேதி காலையிலிருந்து இந்த நிமிடம் வரை திருவரங்கம், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ளவர்கள் திருச்சி நகர்ப்புற பகுதிகளுக்கு வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கார்களில் வருபவர்கள் ஒரு மணி நேரம் ஸ்ரீரங்கம் - திருவானைக்காவில் இருந்து புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியை அடைவதற்கு ஆகிறது என மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டு வருகின்றனர். இலகு ரக நான்கு சக்கர வாகனங்கள் காவிரி பாலத்தில் அனுமதிக்கப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்துமே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தை கடந்து ஓயாமரி வழியாக சத்திரம் பேருந்து நிலையத்தை வரவேண்டும்.

ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு பாலத்தில் செல்ல விதிவிலக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பாலம் பாராமரிப்பு வேலை நடைபெற்று வருகிறது. இரு சக்கர வாகனங்களால் காவிரி பாலம் பராமரிப்பு பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக சற்று முன் இரு சக்கர வாகனங்களையும் பாலத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மக்கள் தற்பொழுது தீவில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் அப்பகுதியில் உள்ள அதிகமான கடைகளும் ,மாம்பழச் சாலை உள்ள பகுதியில் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பேருந்து மாற்றங்கள் வாகனங்கள் செல்வதில் மாற்றங்கள் இருப்பதால் மிகுந்த சிரமத்தால் நான்கு சக்கர வாகனங்களை வீட்டில் வைத்துவிட்டு இரண்டு சக்கர வாகனங்களை அதிகமாக பயன்படுத்துவது தற்பொழுது உறுதியாகி உள்ளது. ஏனென்றால் இரண்டு சக்கர வாகனத்தில் அவசர தேவைக்கு வருபவர்கள் காவிரி பாலத்தை கடந்து செல்லலாம் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். ஆனால் இரண்டு சக்கர வாகனங்கள் நெரிசல் அதிகரித்துவிட்டது. பாலம் பராமரிப்பு பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக தற்பொழுது இரண்டு புறமும் காவேரி பாலத்தில் எந்த வாகனமும் செல்லக்கூடாது என தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய...... https://t.co/nepIqeLanO