மதிய நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருச்சி மாநகரம்

மதிய நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருச்சி மாநகரம்

வெயில் காலம் முன்னதாகவே தொடங்கிவிட்டது. மேலும் பள்ளி பருவ இறுதி தேர்வுகளும் துவங்கியாகிவிட்டது. இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பை தவிர்த்து ஏனைய வகுப்புகள் மதியம் 01:30 மணிக்கு மேல் செயல்பட தொடங்கியுள்ளன. ஆனால் இதனையெல்லாம் திருச்சி மாநகர காவல் துறை கவனத்தில் கொண்டு கூடுதல் போக்குவரத்து காவலர்களை மாநகரம் முழுவதும் பணியமர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்கிறார்கள். மேலும் திருச்சி காந்தி மார்கெட்டை தாண்டி பழைய பிரபாத் தியேட்டர் வருவதற்குள் பொதுமக்கள் பெரும் இன்னல் அடைகிறார்கள். 

மேலும் திருச்சி மாநகரில் கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பினும், அவை மீறப்படுவதாலும் சாலையோரங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் குறிப்பாக திருச்சி பாலக்கரை ஹோலி ரெடிமர்ஸ் பள்ளி பின்புற கேட் எதிரில் செயல்படும் ஜெயலெட்சுமி டிரேடர்ஸ்க்கு சொந்தமான சரக்கு லாரி மணி கணக்கில் சாலையில் நிற்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் குறிப்பாக பழைய பிரபாத் தியேட்டர் பகுதியில் எண்ணிலடங்கா தரை கடைகள், தள்ளுவண்டி கடைகள் சாலையில் ஆக்கிரமிப்பினாலும், வெயில் நேரத்தில் அப்பகுதியில் உள்ள பிர்மானந்தா கூல்ரிங்ஸ் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் திருச்சி மாநகரில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் நீண்ட நாட்களாக சரிசெய்யபடததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் எதிரில் உள்ள பிரதான சாலை. இதற்கு முன்பு திருச்சி மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து என பிரிக்கப்பட்டு தனித்தனியாக துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் தற்பொழுது திருச்சி மாநகரம் வடக்கு தெற்காக பிரிக்கப்பட்ட பின்பு திருச்சி மாநகர காவல்துறை மிக முக்கியமான போக்குவரத்தில் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் மேற்படி வெயில் காலங்களில் வெயிலை பொருட்படுத்தாது பணியாற்றும் போக்குவரத்து காவலர்களின் உடல் நலத்தை பேணும் விதமாக திருச்சி மாநகர காவல்துறை சிறப்பு திட்டங்களையும், சிறப்பு உடைகளையும் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்க வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்துகிறோம். 

எனவே திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் திருச்சி மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தொலைநோக்கு திட்டத்துடன், திருச்சி மாநகரில் மதிய நேர போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்துகிறோம். இப்படிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் செயலாளர் வழக்கறிஞர்.Ra.கிஷோர்குமார்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision