பொது கழிப்பிடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்!

பொது கழிப்பிடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்!

திருச்சி கூனி பஜார் பகுதியில் ஏற்கனவே இருந்த பொது கழிப்பிடத்தை இடித்துவிட்டு புதிய நவீன பொது கழிப்பிடத்தை கட்டித் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வருடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தில் வாக்குறுதி அளித்தனர்.

பிப்ரவரி மாத இறுதிக்குள் பொதுக்கழிப்பிடம் பணியை துவங்குவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது இதுவரை எந்தவித பணியும் தொடங்கப்படவில்லை. நேற்று 09.03.2022 ஊர் பொதுமக்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் கூடி தொடர் போராட்டம் நடத்துவதென கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO