எந்தவித அடையாளம் இல்லாமல் மணல் திருடிச் சென்ற வாகனம் விபத்து - டிரைவர் தப்பி ஓட்டம்

எந்தவித அடையாளம் இல்லாமல் மணல் திருடிச் சென்ற வாகனம் விபத்து - டிரைவர் தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம் கொள்ளிடம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு அடிக்கடி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நம்பர் 1 டோல்கேட் , கொள்ளிடம் காவல் நிலையத்துக்கும், சமயபுரம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தால் உடனே மணல் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு யார் புகார் தெரிவிக்கிறார் என்று மணல் திருட்டில் ஈடுபடுவரிடம் போலீசார் தகவல் தெரிவித்து விடுவதால் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் புகார் அளிப்பவர்களை கொலை மிரட்டல் விடுகின்றனர்.

இந்நிலையில் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தின் மீது மணல் ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி விபத்துக்குள்ளானது. அந்த வாகனத்தில் காவலர்கள் சோதனை செய்தபோது நம்பர் பிளேட் இல்லை, உரிய ஆவணங்களும் இல்லை. மேலும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்துக்குள்ளான வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடியுள்ளார். தகவல் அறிந்த கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை காவலர் போதராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து இப்பகுதியில் மணல் கொள்ளை நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை காவல்துறையினர் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கொள்ளிட ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து கொள்ளிடம் போலீசாரிடம் புகார் அளித்தால் மணல் திருடுபவர்களுக்கு தகவல் தெரிவித்து கொலை மிரட்டல் விடுவதால் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர். மணல் திருட்டு என்பது கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே பொதுமக்களின் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மணல் மாபியாக்கள் பற்றிய புகார் அளித்தால் கொலை மிரட்டல் விடுவதால் யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை அப்படியே முன் வந்தால் காவல்துறையினரே புகார் கொடுப்பவர்களை காட்டி கொடுத்து விடுகின்றனர் இதற்கு யார் முடிவு என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision