புனரமைக்கப்படும் அரசு பேருந்துகள்- அமைச்சர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைகிணங்க தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 1000 பழைய பேருந்துகளை புணரமைத்து புதிதாக கூண்டு கட்டும் பணி சாலை போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தபுள்ளியின்அடிப்படையில் தனியார் கூண்டு கட்டும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக போக்குவரத்து கழகங்களின் 125 பழைய பேருந்துகள் முறையே ஜெமினி கோச்கரூர் - 43, ஆரோ கோச் மதுராந்தகம் - 25, குளோபல் டிவிஎஸ் விராலிமலை - 32, KMS கோச், பெங்களூர் - 25 ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுபணிகள் நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் விராலிமலையில் உள்ள குளோபல் டிவிஎஸ் தனியார் நிறுவனத்திடம் முதல் கட்டமாக 32 பேருந்துகள் ஒப்படைக்கப்பட்டு அவற்றின் கட்டுமானபணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது. இன்று (21.06.2023) போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் விராலிமலையில் உள்ள குளோபல் டிவிஎஸ் கூண்டு கட்டும் நிறுவனத்தில் புதிதாககூண்டு புனரமைக்கும் பணியினை ஆய்வு செய்து அவற்றின் கட்டுமானம் தோற்றப்பொலிவு உள்ளிட்டவைகளை மேற்பார்வையிட்டார்.
அப்போது, இறுதிகட்ட கூண்டுகட்டுமானப் பணியில் இருந்த பேருந்தினை ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் பேருந்துகளின் கட்டுமான பணிகளில்சில மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், கட்டுமான பணிகளை துரிதப படுத்தி விரைந்து முடித்து பேருந்துகளைபொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளிக்கொண்டு வருவதற்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது குளோபல் டிவிஎஸ் அலுவலர்கள் N.ஸ்ரீனிவாசன் CEO, R.N.லிங்கம் Vice President(operations) மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டல பொது மேலாளர் S.சக்திவேல் மற்றும் புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் K.குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn