கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்கள் வாக்கு பதிவு

கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்கள் வாக்கு பதிவு

தமிழக  சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் பல கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் முழு பாதுகாப்பு கவசத்தோடு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம் எனவும் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முழு பாதுகாப்பு கவசம் அணிந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு தனது வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோல் வாக்குச்சாவடி மையங்களில் பணியில் இருந்த அலுவலர்களும் முழு பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr