திருச்சி மாவட்டத்தில் 73.55 சதவீதம் வாக்குப்பதிவு 618550 பேர் வாக்கு பதிவு செய்யவில்லை

திருச்சி மாவட்டத்தில் 73.55 சதவீதம் வாக்குப்பதிவு 618550 பேர் வாக்கு பதிவு செய்யவில்லை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 11,35,780 ஆண் வாக்காளர்களும், 12,02,728 பெண் வாக்காளர்களும், 237 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 23,38,745 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 3,292 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 75.87 சதவீதமும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 76.09 சதவீதமும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 67.02 சதவீதமும்,

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 66.86 சதவீதமும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 66.75 சதவீதமும், லால்குடி சட்டமன்ற தொகுதியில 79.25 சதவீதமும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற 
தொகுதியில் 79.63 சதவீதமும், முசிறி சட்டமன்ற தொகுதியில் 76.02 சதவீதமும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் 76.63 சதவீதமும் பதிவாகியுள்ளது.
ஆக மொத்தம் 9 சட்டமன்ற தொகுதியிலும் சராசரியாக 73.55 சதவீதம் பதிவாகியுள்ளது. மேலும், 8,42,240 ஆண் வாக்காளர்களும், 8,77,897 பெண் வாக்காளர்களும், 58 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 17,20,195 பேர் வாக்களித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr