ரூ.51,000 ரொக்கம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
திருவெறும்பூர் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரைக்குடியில் இருந்து நாமக்கல்லுக்கு டாட்டா ஏசியில் ரூ 51,000 பணத்தை எடுத்துச் சென்றவரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது அதனால் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் கிப்ட்பொருட்களை வழங்கலாம் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் தேர்தல் பறக்கும் படைகளை நியமித்துள்ளது.
அதன்படி உரிய ஆவணம் இல்லாமல் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் பணத்தை பறிப்பதற்கு மற்றும் பரிசுப் பொருட்கள் அதிக அளவில் கொண்டு சென்றால் அவற்றையும் பறிமுதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் பறக்கும் படை அதிகாரியும் தனி வட்டாட்சியருமான ரபிக் அகமது தலைமையிலான பறக்கும் படையினர்திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை குண்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோதுஈடுபட்ட போது.
காரைக்குடியில் இருந்து வந்த டாட்டா ஏசியை தோதனை செய்தபோது அதில் ரூபாய் 51 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி அவ்வையார் தெருவை சேர்ந்த ஜெய்லாவுதீன் மகன் ஹக்கீம் முகமது நாமக்கல்லில் ஆடு வாங்குவதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த படத்தை பறிமுதல் செய்து திருவெறும்பூர் உதவி தேர்தல் அதிகாரி சுதாவிடம் ஒப்படைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision