ஸ்ரீரங்கம் பூ சந்தையில் கொட்டப்படும் கழிவுகளை மாநகராட்சி சார்பாக அப்புறப்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு!!

ஸ்ரீரங்கம் பூ சந்தையில் கொட்டப்படும் கழிவுகளை மாநகராட்சி சார்பாக அப்புறப்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு!!

திருச்சி மாநகரில் ஒரு முக்கியமான பூ சந்தையாக இருப்பது ஸ்ரீரங்கம் பூ சந்தையாகும். இங்கு திருச்சி மாநகரில் இருந்து பலரும் தினம் தோறும் வந்து பூக்கள், மாலைகள் மேலும் திருவானைக்கோவில் ஸ்ரீரங்கம் கோவில் ஆகியவை அமைந்துள்ளதால் அதிகபடியான பூ விற்பனை நடைபெறும் இடமாகும்.

Advertisement

இந்நிலையில் ஸ்ரீரங்கம் பூ சந்தையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன‌. இங்கு தினந்தோறும் கொட்டப்படும் பூ கழிவுகளை மாநகராட்சியில் இருந்து யாரும் வந்து எடுப்பதில்லை என அப்பகுதி பூ வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

மேலும் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu