"இரத்த சோகை இல்லாத கிராமம்" - சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா
தமிழ்நாடு மாவட்டத்தில் உள்ள வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி 14 வட்டாரங்களிலும் வட்டார ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் முதல் அளவில் நடைபெற்ற பரிசு பெற்ற உதவிக்குழுக்களை கொண்டு,
தற்போது மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி "இரத்த சோகை இல்லாத கிராமம்" என்ற தலைப்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (07.11.2024) நடைபெற்றது.
இப்போட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அரங்கத்தில் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சிறுதானியங்கள் மற்றும் பரம்பரிய உணவு திருவிழாவில் வட்டார அளவில் வெற்றி பெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த 14 மகளிர் சுயஉதவிக்குழுவினர் இப்போட்டியில் பங்குபெற்றனர்.
இந்த உணவுத் திருவிழாவில் சிறுதானியங்கள் மற்றும் பரம்பரிய முறையில் உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியை திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், திட்ட இயக்குநர் (மாவட்ட திட்ட வளர்ச்சி முகமை) கங்காதாரிணி ஆகியோர் தொடங்கி வைத்து சுயஉதவிக்குழுக்கள் தயாரித்த சிறுதானியங்கள் மற்றும் பரம்பரிய உணவு பொருட்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட சமூக அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நித்யா, உதவித்திட்ட அலுவலர்கள், மாவட்ட வள பயிற்றுநர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அலுவலர்கள், சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision