ஸ்ரீரங்கத்தில் நாளை சித்திரை தேரோட்டம் கோவில் இணை ஆணையர் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் நாளை (29.04.2022) நடைபெற உள்ளது. 40 அடி உயர திருத்தேரில் அதிகாலை நம்பெருமாள் உபய நாச்சியாருடன் எழுந்தருள்வார். பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து பக்தர்களால் இழுக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று (27.04.2022) தஞ்சையில் சப்பரம் விபத்து நடந்ததை அடுத்து இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் தேரோடும் வீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
பின்னர் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் குறிப்பிடும் போது..... மாரிமுத்து நாளை காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் முன்னதாகவே தேரோடும் வீதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். மீண்டும் தேர் நிலைக்கு வந்தவுடன் தான் மின்சாரம் வினியோகம் தொடங்கும் என குறிப்பிட்டார்.
தேரோடும் நான்கு வீதிகளில் அறநிலையத்துறை ,மாநகராட்சி, தீயணைப்பு துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம். லட்சக்கணக்கான பக்தர்கள் நாளை சித்திரை தேர் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளதால் அவர்களுக்கு தேரோடும் வீதிகளில் 50 இடங்களில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் இரண்டு வருடங்களுக்கு பிறகு கோவிட் தொற்றால் நடைபெறாமல் இருந்த ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO