ராமஜெயம் கொலை வழக்கு -  ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம் திருச்சியில் சிபிசிஐடி டிஜிபி பேட்டி

ராமஜெயம் கொலை வழக்கு -  ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம் திருச்சியில் சிபிசிஐடி டிஜிபி பேட்டி

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்றபோது கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதால், தற்பொழுது நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கின் நிலை குறித்து சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்.....பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் உள்ள தகவல்களை உங்களிடம் பகிர முடியாது.

10 ஆண்டுகள் ஆகிவிட்டது சிபிஐ இடம் சென்று வந்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு ஆறு மாதத்தில் சிறப்பு புலனாய் குழுவின் விசாரணையில் முன்னேற்றம் உள்ளதாக குறிப்பிட்டார். ரவுடிகளிடம் விசாரணை நடத்துவதால் புதிய குழு இந்த கொலை வழக்கில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிறப்பு சிறப்பு புலனாய் குழுவிற்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது. நீங்கள் ரவுடிகளிடம் விசாரணை நடத்த திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO