சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகளின் அவசர அவசியம் கருதி, இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட மொத்தம் 6220 சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் விவரங்கள் இம்மாநகராட்சியின் அனைத்து வார்டுகுழு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை W.P.(MD) Nos. 20338, 27088 and 29884 of 2024, நாள். 07.03.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள் பெயரை நீக்கம் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனவே இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய அனைத்து வார்டு குழு அலுவலகங்களில் 19.03.2025 முதல் 26.03.2025 ஆம் தேதி வரை மாநகராட்சி அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து சரிபார்க்கப்பட உள்ளது.
மேலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்க விரும்பும் வியாபாரிகள்/நபர்கள் சம்மந்தப்பட்ட வார்டுகுழு அலுவலக உதவி ஆணையர் அவர்களிடம் உரிய சான்று மற்றும் ஆவணங்ளுடன் 19.03.2025 முதல் 26.03.2025 ஆம் தேதி வரை அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என்று திருச்சி மாநகராட்சி ஆணையரால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision