தமிழக முதல்வரின் 72 -வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான பேட்மிட்டன் போட்டி

தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மாணவரணி மற்றும் இலக்கிய அணி இணைந்து மாபெரும் பெண்களுக்கான பேட்மின்டன்போட்டி
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு. க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்மாவட்ட இலக்கியஅணி அமைப்பாளர் புலவர் மனோகரன் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட இலக்கியஅணி மற்றும் மாவட்ட மாணவர்அணி இணைந்து காட்டூர் கைலாஷ் நகர் அருகே உள்ள பேட்மிட்டன் அகாடமியில்
32வீராங்கனைகள் கலந்து கொண்ட மாபெரும் பேட்மின்டன் நடைபெற்றது.மேலும் இந்த பேட்மின்டன் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளை மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் அனைவரையும் வரவேற்றார்மேலும் இதில் கலந்து கொண்ட 32வீராங்கனைகள் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்றும் இந்தியை எதிர்ப்போம் என்றும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்
மேலும் 32 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த பேட்மின்டன்போட்டியானது4 சுற்றுகளாக நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர செயலாளரும் மண்டலம் 3ன்தலைவருமான மதிவாணன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் ஆகியோர் சிறப்பாக பேட்மின்டன் விளையாடிய வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார் மேலும் இந்நிகழ்வில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார், மாநகரத் துணைச் செயலாளர்
பொன்செல்லையா, பேட்மின்டன்விளையாட்டு வீரர்கள் இளைஞர்கள் இலக்கிய அணிமற்றும் மாணவர்அணி நிர்வாகிகள்என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision