படைக்கல தொழிலக தினவிழா கொண்டாட்டம்

223 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாதுகாப்புத்தளவாட தொழிற்சாலைகளின், பாரம்பரியமான, பெருமைமிகு நிகழ்வான, படைக்கல தொழிலக தினவிழா (மார்ச்-18), சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
எனினும், கடந்த 2021-ஆம் ஆண்டு, அக்டோபர், 01அன்று, மத்திய அரசு, 41 பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளையும் எழு கார்ப்பரேசன் யூனிட்களாக பிரித்து, தண்ணிச்சையாக அறிவித்தது. அதன் பிறகு, அரசாங்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்டு வந்த, படைக்கல தொழிலக தின விழா நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு, AIDEF, BPMS, CDRA மற்றும் IOFSOA ஆகிய சம்மேளனங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான, UFOE (United Forum of Ordnance Employees), சார்பாக ஒவ்வொரு வருடமும், படைக்கல தொழிலக தின விழா, மார்ச் 18 அன்று, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த வருடமும் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, UFOE (United Forum of Ordnance Employees), வழிக்காட்டுதலின்படி, HEPF தொழிலகத்திலும், இன்று மார்ச் 18, 2025, UFOE/HEPF BRANCH, சார்பாக, சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், அனைத்து தொழிலாளர் தோழர்களும் திரளாக பங்கெடுத்தனர்.
முன்னதாக, அனைத்து தோழர்களுக்கும் படைக்கல தொழிலக தின வரலாறு, அதன் முக்கியதுவம் குறித்த பிரசுரம் மற்றும் Badge வழங்கப்பட்டது. பின்னர், மதிய உணவு இடைவேளையின் போது, தொழிலக உணவக வாயிலின் முன்பு, அனைத்து தோழர்களும் திரளாக பங்கெடுத்தனர். படைக்கல தொழிலக தின உறுதிமொழியை, தோழர் கண்டி விவேக்குமார் ராஜா, பணிமேளாலர், LR/IOFSOA ஆங்கிலத்திலும், விழாவிற்கு தலைமை வகித்த, தோழர். அ. சத்யவாகீசன், உதவித்தலைவர்/HAPF எம்ய்ளாயிஸ் யூனியன், தமிழிலும் வாசித்தனர். விழாவில், எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர், தோழர். J.இரணியன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும், விழாவில், HAPFEU, HAPFMS, IOFSOA, CDRA-ல் அங்கம் வகிக்கும் AIANGO, IOFGOA, NDGBGOA, Supervisor Assn. மற்றும் Clerical Assn. சங்கங்களின் நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் தொழிலாள தோழர்கள் பெருந்திரளாக பங்கெடுத்தனர். விழாவில், HAPF மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர், தோழர், R. குரு, அவர்கள் நன்றியுறை வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision