தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

 தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது.

மேலும் இதன் ஒரு பகுதியாக தெற்கு மாவட்ட கழகம் காட்டூர் பகுதி கழகம் சார்பில் பாப்பா குறிச்சி செல்லும் சாலையில் உள்ள அண்ணா திடல் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்திற்கு காட்டூர் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான நீலமேகம் தலைமை வகித்தார் 

வருகை புரிந்து அனைவரையும் 38 வது வட்டக் கழக செயலாளர் தமிழ்மணி வரவேற்றார்  சிறப்பு விருந்தினராக திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சிறுபான்மையினர் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் 

மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்பள்ளி கல்வித்துறை அமைச்சர் உரையாற்றியதாவதுஇன்று நல்ல ஆட்சி திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய தமிழக முதல்வரின் பிறந்தநாளை நாம் கொண்டாடிக்

கொண்டிருக்கின்றோம் இந்த விழாவில் நாம் யாரை அழைத்து இருக்கிறோம் என்றால் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அமைச்சர் நாசர் அவர்களை அழைத்து இருக்கிறோம் அவரை நமது தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அவர்களை வரவேற்பதாகவும் நாசர் அவர்கள் இளைஞர் அணி குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் என்றும் 1988ல் தேசிய அளவில் மிகப்பெரிய மாநில மாநாட்டை கலைஞர் அவர்கள் நடத்திய பொழுது அன்றைக்கு சமூக நீதி காவலரான வி.பி சிங் கலந்து கொண்ட பொழுது அதில் இளைஞர் பட்டாளத்தை

தற்போதைய முதல்வர் நடத்திக் காட்டிய பொழுது அதற்கு முன்வரிசையில் வெள்ளை ஆடைஅணிந்து கருப்பு சிவப்பு கொடி ஏந்தி நடந்து வந்தவர் தான் நாசர் என்றும் மாதம் ஒருமுறை முதல்வரும் துணை முதல்வரும் அடிக்கடி எங்கு செல்கிறார்கள் என்றால் அது திருவள்ளூர் மாவட்டத்திற்கு தான் என்றும் அதுவும் நாசர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் செல்வதாகவும் எடுத்துரைத்தார் 

மேலும் இந்த பிறந்தநாள் விழா காணக்கூடிய தமிழக முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருவதாகவும் உதாரணமாக கூறினால் காலை உணவு திட்டம் இந்த திட்டத்தை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் நமது தமிழகத்திற்கு வந்து அதை கற்றுக்கொண்டு அதை அங்குள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்படுத்தி வருவதாகவும் மேலும் மகளிர் உரிமை திட்டத்தை ஒன்றியத்தினாலும்

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் நம்மை பார்த்து அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் விடியல் பயணம் கட்டணம் இல்லா மகளிர் பயணத்தை பார்த்து கர்நாடக மாநிலத்தில் நமது திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் மேலும் குஜராத் மாநிலத்திலிருந்து மருத்துவ பட்டாளமே நமது மாநிலத்திற்கு வருகை புரிந்து நமது மருத்துவ கட்டமைப்பை பார்த்து வியந்து அதை அவர்கள் மாநிலத்தில் பின்பற்றி வருவதாகவும் எனவே இப்படிப்பட்ட தமிழக மாநிலத்திற்கு மட்டும் திட்டம் தீட்டாமல் இந்தியாவிற்கே திட்டம் தீட்ட கூடிய முதல்வரை நாம் பெற்றிருப்பதாகவும் எனவே இன்றைய பிறந்தநாள் விழா கூட்டத்தில் அவர் வாழ்வாங்கு வாழ வாழ்த்த வேண்டும் எனவும் அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்

மேலும் இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் மூக்கன் லீலா வேலு திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா , பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ் விஜயகுமார் சிவக்குமார் மாமன்ற உறுப்பினர் செந்தில், மாமன்ற உறுப்பினர் கே கேகே. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இறுதியாக 38 வதுவட்டக் கழக செயலாளர் மன்சூர் அலி நன்றி கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision