திருச்சி திருவானைக்காவல் தேரோட்ட முன்னேற்பாடுகள் ஆட்சியர் ஆய்வுக்கூட்டம்

திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி தேர் திருவிழா (30. 03.2025 )அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு துவங்குவதால் காவல்துறை பக்தர்களை ஒழுங்குபடுத்தல், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரளாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து கண்காணிப்பு, தரிசனம் செய்ய பக்தர்களை உடனே வெளியேற்றுதல்,திருக்கோயில் பகுதிகளில் கூட்ட நெரிசலை சமாளிக்க காவலர்கள் ஷிப்ட் முறையில் பணியமர்த்த வேண்டும்.
தேரோட்டத்தின் போது தேரோடும் வீதிகளில் தற்காலிக கடைகள் அமைக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தேரோட்டம் நடைபெறும் பொழுது தேருக்கு முன்பாகவும் பின்பாகவும் சுமார் 15 அடி இடைவெளி இருக்கும்மாறு தேருக்கு இருபுறமும் பக்கவாட்டில் தேர் சக்கரங்களில் இருந்து ஏழு அடி இடைவெளி இருக்கும் வகையில் பக்தர்கள் எவரும் தேருக்கு அருகில் வராமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு அமைத்திட வேண்டும்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சார்பில் திருக்கோவிலில் திருத்தேர் அருகில் ஒரு தீயணைப்பு வண்டி மீட்பு மற்றும் முதலுதவி குழு உடன் (30.03 2025) ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் மெயின் ரோடு சந்நிதி வடக்கு தெற்கு பிரகாரம் மற்றும் தேவையான இடங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவ முகாம் முதலுதவி முகாம்கள் தேவையான இடங்களில் ஏற்படுத்த வேண்டும். திருவானைக்காவல் பகுதியில் ஏராளமான பக்தர்கள் நடந்து வருவதால் சாலையை சமன் செய்தல். சாலையில் இரு புறங்களிலும் குண்டும்,குழிகள் இன்றி ஒரே சீரான மண் அமைப்பு ஏற்படுத்தி எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்றவாறு வசதி ஏற்படுத்தி தருதல்.பக்தர்களுக்கு ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் குழாயுடன் நிறுவி குடிநீர் வசதியும், தற்காலிக கழிவறை வசதியும்,ஏற்படுத்தி தர வேண்டும். திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்து வசதிகளை( 29.03.2025 மற்றும் 30.03 2025 ) ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் தான் வழங்க வேண்டும். முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகளை வழங்குவதை உணவு பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்க கூடாது. திருக்கோயில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தேர் திருவிழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் கோயில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும்.இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ராஜலட்சுமி, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு திரு.சிபின் அவர்கள்,துணை காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந்த்பனாவத் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு அதியமான் கவியரசு அவர்கள், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் திருமதி கல்யாணி அவர்கள், உதவி ஆணையர் செயல் அலுவலர் திரு வே.சுரேஷ் அவர்கள்,உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision