தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொணலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் கொணலை ஊராட்சி புனித காணிக்கை மாதா ஆர் சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மா பிரதீப் குமார் அவர்கள் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கமே கிராமத்தில் உள்ள வேலைகளின் முன்னேற்றத்தையும் அடுத்த ஆண்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள வேலைகளில் விபரங்களையும் நாம் அறிந்து கொள்வதற்காக நடத்தப்படுகிறது.ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் முக்கியமான பொருட்கள் விவாதிக்கப்படும்.அதன் அடிப்படையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கிராம சபை கூட்டத்தில்
கிராம ஊராட்சி நிர்வாக மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும் நிர்வாகம் இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்கல் குறித்தும் சுய சான்றிதழ் முக்கியத்துவம் குறித்தும், இது போல் பல விஷயங்கள் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
குழந்தை தொழிலாளர்கள் குறித்தும் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் அற்ற ஊராட்சியாக செயல்படுவது குறித்தும் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் பாலின பாகுபாடு ஒழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் முக்கியத்துவம் சாய்ந்த திட்டங்கள் குறித்தும் ஊர் பொதுமக்கள் தெரிவிக்கும் பட்சத்தில் வரும் நிதியாண்டில் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மா பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து தூய்மை பணிகளை சிறப்பிக்க மேற்கொள்ளும் தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 13 நபர்களுக்கு அவர்களுக்கு பணியினை பாராட்டி பொன்னாடை அனுபவித்து கௌரவித்து பர பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாணவமாணவிகளுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டினார். கொணலை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசுத்துறைகள் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து திட்ட விளக்கம் கண்காட்சி அறநிலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கங்காரதாரணி திட்ட இயக்குனர் த சுரேஷ் உதவி இயக்குனர் ஊராட்சி ஊராட்சிகள் திரு எஸ் குமார், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் த சிவசுப்பிரமணியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ஸ்ரீதேவி பல்வேறு அரசுத்துறை உயர் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision