ஊரடங்கு காலத்தில் பல்வேறு தரப்பினருக்கு உதவி வரும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா.
முழு ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு உறுதுணையாகவும், பயன் பெறும் வகையில் அவர்களிடம் இருந்து பழங்களை மொத்தமாக விலைக்கு பெற்று முதியோர் இல்லங்கள், காவல்துறையினர், மருத்துவ பணியாளர்களுக்கு, உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தோடு இணைந்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா வழங்கினார்
விவாசய பெண்மணி மொத்தமாக 80 கிலோ பழங்களை அவர்களிடம் பெற்றது இன்றைய சூழலில் அவர்கள் குடும்பித்திற்கு பெரிய உதவியென மிகவும் உற்சாகமாக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவரிடம் தமிழக அரசுக்கும் காவல்துறையினருக்கும் நன்றி கூறினார்
எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் கோவிட் வார்ட் பணியாளர்களுக்கு பழங்கள், நீம் சோப், உணவு பொருட்கள் வழங்கினார்.
தனது சரகத்திற்கு உட்பட்ட கரூர் மாவட்ட எல்லையில் உள்ள சாந்தி வனம் இல்லத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு மதிய உணவும் வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx