தடுப்பூசி பற்றிய விழிப்புணர்விற்காக இணைய வழியில் மக்கள் கருத்துக்கள் மூலம் ஆய்வு

தடுப்பூசி பற்றிய விழிப்புணர்விற்காக இணைய வழியில் மக்கள் கருத்துக்கள் மூலம் ஆய்வு

தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத பெரியவர்களின் கோவிட்19 
நிகழ்வு மற்றும் தீவிரத்தன்மை பற்றிய ஒப்பீட்டிற்கான ஒரு வருடகால கண்காணிப்பு ஆய்வு மேற்கொள்வதற்காக இணைய வழியில் மக்களின் ஆர்வத்தின் பெயரில் சேகரிக்கப்படும் தகவல்களை கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதனை முன்னெடுத்துள்ள திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் முத்துவேல் பாலசுப்ரமணியம் கூறுகையில்... இந்த ஆய்வானது மருத்துவமனைகளில் வைத்து செய்யப்படும் ஆய்வுகளை போன்று இல்லாமல் சாதாரணமாக பொதுமக்களின் கருத்துக்களைக் கொண்டு உண்மை தன்மையை கண்டறிவதற்கான ஒரு சிறு முயற்சியே. 

கொரானா என்பது உலகம் முழுவதும் பாதிக்கும் ஒரு கொடிய வைரஸ் நோயை உருவாக்கும். நாவல் கொரானா  வைரஸ் SARS- COV-2 ஆல் ஏற்படுகிறது .இது பொது சுகாதாரத்திற்கு உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை மற்றும் மோசமான சமூக பொருளாதார நிலை வைரசை கட்டுப்படுத்துவது கடினமான பணி ஆகிவிட்டது. 


2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து அவசர கால பயன்பாட்டிற்காக பல தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மூன்று தடுப்பூசிகளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. பொதுமக்களிடையே தடுப்பூசி பற்றிய தயக்கம் தொற்று நோய் கடப்பதற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. தடுப்பூசிக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் பரவும் தகவல்கள் இந்த தயக்கத்தை மேலும் அதிகரிக்கின்றன. கோவிட் 19 தடுப்பதில் கிடைக்கக்கூடிய இந்திய தடுப்பூசிகளின் செயல் திறனை மதிப்பிடுவது எங்கள் ஆய்வின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம்.


பங்கேற்கும் மக்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக பாதுகாக்கப்படும் எந்த நேரத்திலும் மக்களின் அடையாளத்தை வெளியில் விடமாட்டோம். தகவல்கள் 
ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மற்றும் அவர்களின் ரகசியத் தன்மை மதிக்கப்படும். இந்த கணக்கெடுப்பின் போது தன்னார்வமாக விவரங்களை அளிக்கும் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை பதிவு செய்யப்படும். அந்த கண்காணிப்பு காலத்தில் நோய் விவரங்கள் குறித்து விசாரிக்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அலைபேசியின் மூலம் அவர்களை தொடர்பு கொள்வோம். இந்த ஆய்வின நோக்கம் மக்களிடையே தடுப்பூசி பற்றிய தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx