திருச்சி மகளிர் தனிச்சிறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி!

திருச்சி மகளிர் தனிச்சிறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி!

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் தனிச்சிறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி இன்று நடத்தினர்.

Advertisement

இந்த பேரணி திருச்சி காந்தி மார்கெட் மகளிர் தனி சிறையிலிருந்து மார்க்கெட் வழியாக பாலக்கரை ரவுண்டானா, சப் ஜெயில் ரோடு வழியாக மகளிர் சிறையை வந்தடைந்தனர். இதனை மகளிர் சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் மகளிர் தனிச் சிறை பெண் காவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement