அமைச்சரின் சூழ்ச்சி ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு - எம்.பி மருமகன் பேட்டி

அமைச்சரின் சூழ்ச்சி ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு - எம்.பி மருமகன் பேட்டி

திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆவின் பால் மற்றும் பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. கடந்த 3ஆம் தேதி விஜய சாரதி என்பவர் அங்கு ஒரு இருசக்கர வாகனம் நின்றுள்ளது. அதை சாவியுடன் இருந்ததால் அருகில் இருந்த மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு நிறுத்தி உள்ளார்.

இதனை பார்த்த ஆவின் பூத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அவரை பிடித்து இருசக்கர வாகனத்தை திருடியவர் என அடித்துள்ளனர். மேலும் அவரை கடத்தி சென்று தில்லை நகரில் முத்துக்குமார் என்னும் கரத்தே முத்துக்குமார் வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். சுயநினைவு இழந்து விஜய் சாரதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளார்.

விஜயசாரதியின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் (கொலை முயற்சி, தாக்குதல் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில்) முத்துக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்பொழுது முத்துக்குமாரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். பிணை கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்ற பொழுது அவர்கள் இரண்டாம் (02.06.2023) தேதி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்

இல்லையென்றால் அப்பொழுது இந்த பிணை குறித்து விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முத்துக்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் திமுக உறுப்பினர். திமுக ராஜசபா உறுப்பினர் சிவா வின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு பதிவு குறித்து கராத்தே முத்துக்குமார் கூறுகையில்..... ஆவின் பாலகத்தில் நின்று கொண்டிருந்த வண்டி திருடியதாக விஜய சாரதி என்பவரை பொதுமக்கள் பிடித்துள்ளனர். இது குறித்து ஒரு வழக்கறிஞராக நான் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். 

உடனே அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எந்த காயம் இல்லை என அரசு மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் தேதி எந்த காயம் இல்லாதவர், 13ஆம் தேதி கை முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவும் கராத்தே முத்துக்குமார் மற்றும் சில ஆட்கள் சேர்ந்து அவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சம்பவத்திற்கு பிறகு நான் சென்னை சென்று விட்டேன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து என் நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். நான் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோரி இருந்தேன். பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதாக பொய்யான தகவல்களை காவல்துறை சார்பில் உயர்நீதிமன்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னிடம் அனைத்து ஆதாரங்கள் இருக்கிறது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் 15 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என் மீது உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தார். எங்கள் வீடு தாக்கப்பட்ட போது அனைத்து சி சி டி வி காட்சிகளும் கிடைக்கப் பெற்றாலும், இது தொடர்பாக வழக்கு செய்ய பதிவு செய்யப்பட்டதா? சம்பவம் நடந்த அனைத்தும் ஒரே காவல் நிலையத்திற்கு உட்பட்டது தான். பின் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் நிலையம் சூறையாடப்பட்டது இதற்கு நீதிமன்ற கண்டனத்திற்கு உட்பட்டார்களா காவல்துறையினர். பொது சொத்தை சேதம், பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தியது இதற்கு எளிமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை யார் தூண்டுதல் பெயரில் நடைபெற்றது இவர்கள் யாருடைய ஆட்கள்

எங்கள் வீட்டை தாக்கியது யாருடைய ஆட்கள் எங்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதும் யாருடைய தூண்டுதலின் பேரில் இருக்கும் என்பது தெரியும். ஒரு திருடன் கொடுத்த வாக்குமூலத்தை நம்பி 10 நாட்களுக்கு பிறகு தாமதமாக போடப்பட்ட ஒரு வழக்கை வழக்கறிஞர் என்ற முறையில் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மாமனார் திருச்சி சிவா பெயரை களங்கம் ஏற்படுத்துவதற்காக இது போன்று தான் 2007 ஆம் ஆண்டு என் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது இதிலும் என் மாமனார் பெயரை சேர்த்திருந்தார்கள். அவரை அரசியலில் இருந்து ஒழிக்க வேண்டும் உட்கட்சி நோக்கத்திற்காக தான்

தனிமனிதனை விட இயக்கம் தான் பெரிது என்று ஒருவர் கூறி இருந்தார். பழிவாங்க நோக்கத்தோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் போடப்பட்ட வழக்கும் தற்போது போடப்பட்டுள்ள வழக்குக்கும் காரணம் அமைச்சர் கே.என். நேரு தான். கட்சியின் முதன்மைச் செயலாளர், இந்த மாவட்டத்தின் அமைச்சர் இவர தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் இருக்கக்கூடிய தான் அந்த காவல் நிலையம். ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது பாதுகாப்பு வழங்குவோம் என்று உறுதி அளித்தார்கள். ஆனால் எங்கள் மீதே வழக்கு போட்டுள்ளார்கள்.