ஜங்சன் மேம்பாலத்தில்  கருமண்டபம் பகுதியிலிருந்து இரு வழி போக்குவரத்து காவல் ஆணையர் திறப்பு

ஜங்சன் மேம்பாலத்தில்  கருமண்டபம் பகுதியிலிருந்து இரு வழி போக்குவரத்து காவல் ஆணையர் திறப்பு

திண்டுக்கல் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறின்றி செல்ல ஜங்சன் மேம்பாலத்தில் செல்ல ஒரு பகுதி போக்குவரத்து பயன்பாட்டிற்கு தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தின் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து  மாநகரத்தில் போக்குவரத்து காவல் நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் தொடர்ச்சியாக திண்டுக்கலில் இருந்து திருச்சி நோக்கிவரும் அனைத்து வாகனங்களும், ஜங்சன் மேம்பாலத்தின் கீழ் வந்து மத்திய பேருந்து நிலையம், இரயில்வே நிலையம், காந்திமார்க்கெட், எடமலைப்பட்டிபுதூர் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் ஜங்சன் மேம்பாலத்தின்கீழ் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர்   நேரடியாக ஆய்வு செய்தும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, காவல் துணை ஆணையர் தெற்கு சரகம் மற்றும் காவல் உதவி ஆணையர் தெற்கு சரக போக்குவரத்து  ஆலோசனைகள் வழங்கினார்.

போக்குவரத்தை சீர்செய்ய உத்தரவிட்டதின் பேரில், ஜங்சன் மேம்பாலத்தின் கருமண்டபம் சாலை முகப்பு பகுதியில் பாலத்தின்மேல் செல்லமால் இருக்க இதுவரை பாலத்தின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கள் அகற்றப்பட்டு, கருமண்டபத்திலிருந்து வரும் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்கள் இனிவரும் காலங்களில் அரிஸ்டோ மேம்பாலம் வழியாக பாலத்தின்மேல் சென்று மத்திய பேருந்து நிலையம், இரயில்வே நிலையம், காந்திமார்க்கெட், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து இடையுறு இல்லாமல், காலை 7.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல வழிவகை செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
கொண்டுவரப்பட்டுள்ளது. 

இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறின்றி சீரக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்  தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn