திருச்சி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு - சிறந்த 10 மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு

திருச்சி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு - சிறந்த 10 மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் முனியாண்டவர் கோயில் திருவிழா முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

4 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் 75 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். இதில் முதல் 10 மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசுகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் 3வது ஜல்லிக்கட்டு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மாடுபிடி வீரர்கள்  கோவிட் தடுப்பூசி 2 தவணை போட்டுள்ளனரா என்பதை கணடறிந்த பிறகு களத்தில் இறங்க அனுமதித்தனர். கூத்தைப்பார் ஜல்லிக்கட்டை காண சுற்றுபுற கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கூத்தைபாருக்கு வந்து வீடுகளிலும், மாடியில் அமர்ந்து ஜல்லிகட்டை கண்டு களித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn