திருச்சியில் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள்

திருச்சியில் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள்

கொரோனோ பரவல் அதிகரிப்பால் அரையாண்டு விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. 40 நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. 100 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர். கொரோனோ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படுகிறது. மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகவசம் அணிந்து வந்தனர். 

பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் காய்ச்சல்  உள்ளதா என்பதை வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்த பின்னர் பள்ளியின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனோ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் 15 வயது முதல் 18 வயத்துக்குட்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் நண்பர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn