திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 14 வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுவதாக திமுக கூட்டணி கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது .காங்கிரஸ் உடன் வார்டு பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் திமுகவின் மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  மாநகராட்சி முன்னாள் துணை மேயர் அன்பழகன் 27வது வார்டிலும் திருவெறும்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் 40வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.

முதல்கட்டமாக 44 வேட்பாளர் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது .தெற்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் பட்டியல் விபரம் மட்டும் வெளியாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn