திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி பகுதியில் உள்ள நந்தியாறு தூர் வாரப்படாத தால் சங்கேந்தி, வெள்ளனூர், இருதயபுரம் கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள 300 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இது மட்டுமல்லாது புள்ளம்பாடியிலிருந்து சங்கேந்தி செல்லும் சாலையில் மழை நீர் வெள்ளம் போல அடித்துச் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை யான பாடாலூர் அருகேயுள்ளது. பெரம்பலூர் மாவட்ட்பகுதியில் பெய்த கன மழை இப் பகுதியில் உள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் உருவாகும் நந்தியாறு நம்புகுறிச்சி, கொளக்குடி,காணக்கிளியநல்லூர்,வந்தலைக்கூடலூர், சங்கேந்தி, இருதயபுரம், செம்பரை, மாங்குடி , நத்தம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் வடிகாலாக கலக்கிறது.
நேற்று(16.11.21) பெரம்பலூர் மாவட்ட பகுதியில் பெய்த கன மழை நந்தியாறு வழியாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நந்தியாறு நீண்ட ஆண்டுகளாக தூர்வாரப்படாத தால் சங்கேந்தி, இ.வெள்ளனூர், இருதயபுரம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள 300 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. இது மட்டுமல்லாது புள்ளம்பாடியிலிருந்து சங்கேந்தி செல்லும் சாலையில் நந்தியாறு கரை உடைந்ததால் மழை நீர் வெள்ளம்போல சாலையின் குறுக்கே பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இப் பகுதி மக்கள் மாற்றுப் பாதையான இ. வெள்ளனூர் வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ,கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் முதலில் டிராக்டரில் ஆய்வு செய்தனர். அதன் பிறகு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனும் நேரில் வந்தவுடன் எம்.எல்.ஏ டிராக்டரை ஓட்ட மாவட்ட ஆட்சியர் சிவராசும் மட்டும் மழைநீர் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர் .
நந்தியாற்றில் மழைநீரின் வேகம் அதிகமாக இருந்ததால் நடந்தோ காரிலோ செல்ல முடியாத நிலையில் டிராக்டரை எம்எல்ஏ ஓட்டி ஆட்சியருடன் அங்கிருந்து சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.