சமயபுரத்திற்க்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் பலி - சோகம்

சமயபுரத்திற்க்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் பலி - சோகம்

மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு விரதம் இருந்து தரிசனம் செய்வதற்காக திருச்சி வளநாடு கைகாட்டி அருகே கீழப்பளுவஞ்சி உள்ளிட்ட  கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் நடை பயணமாக மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இன்று(22.02.2025) காலை திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டி வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த பொழுது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த பெரிய வாகனம் ஒன்று பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. சம்பவ இடத்தில் கீழப்பளுவஞ்சி சேர்ந்த வெள்ளையம்மாள்(50) உயிரிழந்தார். செல்லம்மாள் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விபத்து குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

காலையில் பனி மூட்டமாக இருந்தது.மோதிய வாகனம் எதுவென்று பக்தர்களுக்கு தெரியவில்லை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடன் நடந்து வந்தவர் விபத்தில் உயிரிழந்ததால் மற்ற பக்தர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision