நாளை (23.02.2025) ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் பால்பண்ணை சர்வீஸ் ரோடு அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதால், விறகுப்பேட்டை, தேவதானம், மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை ஜெகநாதபுரம், ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 23.02.2025 ஒருநாள் இருக்காது.
24.02.2025 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision