திருச்சி ரயில்வே வளாகத்தில் ஆதரவற்ற நபர்கள் மீட்பு

திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் அவர்கள் தலைமையில் இன்று 22.02.2025 திரு.சந்தீப், உதவி ஆய்வாளர் மற்றும் படை அங்கத்தினர் வழக்கமான ரோந்து பணியின் போது 01 மனநலம் குன்றிய பெண் மற்றும் 01 முதியவர் திருச்சி ரயில் நிலைய பிரதான நுழைவாயில் பகுதியில் நடமாடுவதைக் கவனித்தனர். பின்னர் விசாரணையில்,
அவர்களின் பெயர் முகவரி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முருகானந்தம் என தெரிய வந்தது. மனநலம் குன்றியவர் அவரது பெயர், முகவரி தெரிவிக்கவில்லை. மேற்குறிப்பிட்டவர்கள் பத்திரமாகப் மீட்கப்பட்டு திருச்சியில் துறையூரில் உள்ள தாருல் முஹப்பா அனாதை இல்ல அறக்கட்டளையில் மேலதிக பராமரிப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஒப்படைக்கப்பட்டனர்.மேற்கூறிய ரயில்வே பாதுகாப்பு படையினரின் சிறப்பான பணி பயணிகள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision