போதை மாத்திரையுடன் பிடிபட்ட இருவர் கைது

முசிறியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் போலீசார் காவல் ஆய்வாளர் செல்லதுரை தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை எடுத்து அவரது வாகனத்தை சோதனை இட்டபோது வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் பிடிபட்டவர் திருச்சி லால்குடி அருகே பூவாளூர் பகுதியைச் சேர்ந்த மருது என்பவரின் மகன் கனகராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் முசிறி அழகாப்பட்டி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதை புகையிலை கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கனகராஜ் மற்றும் மகேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர்.
பின்னர் கனகராஜ் மற்றும் மகேஷ் இருவரையும் துறையூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision