திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே மோதல் - ஐந்து பேர் கைது 

திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே  மோதல் - ஐந்து பேர் கைது 

திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்குமலை அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமைய்யா. இவரது மகன் சித்ரவேல் (45). ஆட்டோ தொழிற்சங்க செயலாளர். இவருக்கும் இதே சங்கத்தில் தலைவராக உள்ள வாழவந்தான்கோட்டை பொன்நகரைச் சேர்ந்த பொன்னுசாமி (49) க்கும் இடையே சங்க உறுப்பினர்கள் மாற்றம் செய்ததில் பிரச்சனை தகராறில் முடிந்தது.

இதுகுறித்து பேச வேண்டுமென பொன்னுசாமியின் மருமகனான தொண்டமான்பட்டியைச் சேர்ந்த வளன் ஜான்கென்னடி, அவரது தம்பி வளன் ஜான் சகாயராஜ் ஆகியோர் சித்ரவேலை வாழவந்தான்கோட்டைக்கு வரவழைத்து அவரையும் அவரது ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியையும் நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சித்ரவேல் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் விசாரணை மேற்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார். 

இதன் முடிவில் எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிந்து சகோதரர்களான வளன் ஜான்கென்னடி, வளன் ஜான்சகாயராஜ், பொன்னுசாமி ஆகிய 3 பேர்களையும் கைது செய்தார். இதேபோல், பொன்னுசாமியும் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். இதில், தன்னை வழிமறித்த வடக்குமலை அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த சித்ரவேலின் பெரியம்மா மகன் ராமன் (44), இவரது மைத்துனர் மணிகண்டன் (37) ஆகிய இருவரும் தகராறு செய்ததுடன், தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிந்து ராமன், மணிகண்டன் ஆகிய 2 பேர்களையும் கைது செய்தார்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷம் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision