திருச்சி தேசிய நெடுஞ்சாலை இரு கையும் விட்டு வாகனத்தை ஒட்டிய இளைஞர் கைதாகி அறிவுரை

திருச்சி தேசிய நெடுஞ்சாலை இரு கையும் விட்டு வாகனத்தை ஒட்டிய இளைஞர் கைதாகி அறிவுரை

திருச்சி சமயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 25.02.2025-ம் தேதி அன்று இளைஞர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் (Yamaha R15 Blue and Grey) சாலையில் ஆபத்தான முறையிலும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தனிப்படையினை அமைத்து இளைஞரை தேடிவந்தனர். இன்று (02.03.2025) காலை அடையாளம் கண்டு பாலகிருஷ்ணன் வயது-28 (சென்டிரிங் பணி) எடமலைப்பட்டி புதூர்ரை சேர்ந்த இவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு தக்க அறிவுரை வழங்கி காவல் நிலைய பிணையில் அனுப்பப்பட்டார்.

மேலும் கைதான இளைஞர் இதுபோன்ற சாகசத்தில் இளைஞர்கள் யாரும் ஈடுபடக்கூடாது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுங்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் நீங்களும் கைது செய்யப்படுவீர்கள் என்று மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision