திருச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 131 மையங்களில் 31 580 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 131 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. அந்த தேர்வில் 16,864 மாணவிகள் 14716 மாணவர்கள் என மொத்தம் 31580மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
131 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனித் தேர்வர்களுக்கு 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 549 பேர் தனித்தேவர்களாக 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்பொது தேர்வை கண்காணிப்பதற்காக 230 பறக்கும் படையினர் பணியமற்றப்பட்டுள்ளனர்.
தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக மாணவிகள் தேர்விற்கு தயாராகினர். குறிப்பாக தாங்கள் ஏற்கனவே படித்த பாடத்தை மீண்டும் நினைவுகூர்ந்தனர். மாணவிகளுக்கு ஆசிரியர்களும் வழிகாட்டல்களை வழங்கினர். தொடர்ந்து தேர்வு அறைக்கு சென்ற மாணவர்களுக்கு 10 மணிக்கு வினாத்தாளும் 10.15 க்கு விடைகள் எழுதும் தாளும் வழங்கப்பட்டது. அதனையடுத்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision