திருச்சியில் பிரபல ஸ்வீட் கடையில் தயாரிப்பு தேதிக்கு முன்னரே வரும் பலகாரம் அதிர்ச்சி - twitterல் வைரல்

திருச்சியில் பிரபல ஸ்வீட் கடையில் தயாரிப்பு தேதிக்கு முன்னரே வரும் பலகாரம் அதிர்ச்சி - twitterல் வைரல்

திருச்சியைச் சேர்ந்த வசிஸ்டன் (Vasishtan) என்பவர் X- சமூக வலைதளத்தில் புகைபடத்துடன் ஒரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள பிஜி நாயுடு ஸ்வீட் கடையில் நேற்று (15.01.2025) தின்பண்டம் வாங்கியுள்ளார்.

அந்த தின்பண்டம் கவரில் தயாரிப்பு தேதி இன்று (16.01.2024) என அச்சிடப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் வசிஸ்டன், இது குறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்புள்ளார். ஆனால் முன்னுக்குப் பின் முரணாக, குழப்பமான பதிலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தான் வாங்கிய தின்பண்டத்தில் ஏற்பட்ட குளறுபடி குறித்து அவற்றை ஆதாரத்துடன் பதிவு செய்து தான் பரபரப்பாகியுள்ளது.

இதுபற்றி வீடியோ ஒன்றை அந்த வாடிக்கையாளர் X தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது பொங்கல் பண்டிகை கொண்டாடி வரும் வேளையில் விற்பனைக்காக தயார் செய்யப்படும் தின்பண்டங்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யப்படும் தேதிகள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்து வகையில் இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தையும், பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் பிரபல BG நாயுடு ஸ்வீட் கடையில் இந்த செயல்பாடு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் எழுப்பும் கேள்வி அப்போ எல்லா தின்பண்டங்களும் இப்படி தான் தயாரித்து விற்கப்படுகிறதா என்று கேட்டுள்ளார். உணவு பபாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision