திருச்சியில் போலீசாரின் சிசிடிவி கண்காணிப்பு அறை திடீரென தீப்பற்றி எரிந்தது

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே போலீசாரின் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை திடீரென தீப்பற்றி எரிந்ததால் இரண்டு லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்கள் எரிந்தது.நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா பகுதியானது திருச்சி, சென்னை, சேலம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்த ரவுண்டானா பகுதியில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் மற்றும் பயணிகள் வந்து சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த பகுதியில் வாகன விபத்துகள் மற்றும் குற்றச்சம்பவங்களை கண்காணிப்பதற்காக சிசிடிவிகேமராக்கள்பொருத்தப்பட்டு ரவுண்டானாவின் மையப்பகுதியில் குற்ற கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையில் தீப்பற்றி எரியத்தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீயை அணைக்க முயன்றனர்.இருப்பினும் கண்காணிப்பு அறையில் பொருத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த எல்இடி டிவி மற்றும் சிசிடிவி கேமரா எக்யூப்மெண்ட்ஸ் உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் தீயில் கருகியது.
தொடர்ந்து தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது கண்காணிப்பு அறையில் இருந்த மின்சாதனங்களில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது தெரியவந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision