வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா - போக்குவரத்து மாற்றம்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா - போக்குவரத்து மாற்றம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா (10.01.2025)-ந் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு (09.01.2025)-ம் தேதி மதியம் 14:00 மணி முதல் (11.01.2025)-ம் தேதி 14:00 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது.

நகரப் பேருந்துகள் : மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்து வழித்தடங்கள். அண்ணாசிலை ஓடத்துறை பாலம் மாம்பழச்சாலை காந்தி ரோடு JAC கார்னர், EVS சாலை ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின்பு ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம், ஓடத்துறை, சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்து வழித்தடங்கள். ண்ணாசிலை ஓடத்துறை பாலம் மாம்பழச்சாலை T.V. கோயில் ட்ரங்க் ரோடு சோதனை சாவடி எண்.6 கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது T.V. கோயில் ட்ரங்க் ரோடு வழியாகவே சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும். ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை. அரசு சிறப்பு பேருந்துகள் தேவைக்கேற்ப மட்டுமே திருவரங்கம் பேருந்து நிலையம் வரவேண்டும். கூடுதலாக வரும் பேருந்துகள் காவல் சோதனைச் சாவடி-6 அருகில் நிறுத்தி வைக்க வேண்டும்.

புறநகர் பேருந்துகள் : சென்னை அரியலூர், பெரம்பலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கத்திலிந்து வரும் பேருந்துகள் CP-6-ல் இருந்து திருவானைக்காவல் வரக்கூடாது. அனைத்து பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் ஓடத்துறை, ஓயாமரி ரோடு வழியாக சென்னை புறவழிச்சாலையில் சென்று வர வேண்டும்.

சரக்கு வாகனங்கள் : திருவரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளுக்குள் சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதியில்லை.

பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள் மிக முக்கிய நபர்களின் வாகனங்கள் :

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வரும் மிக முக்கிய நபர்கள் மாம்பழச்சாலை, அம்மாமண்டபம் ரோடு, ராகவேந்திரா ஆர்ச், பீட்-38 வந்து மேலவாசல் வழியாக மேல சித்திரை வீதி, மேல உத்திரை வீதி, வடக்கு உத்திரைவீதி, கிழக்கு உத்திரை வீதி, ரங்கா ரங்கா கோபுரம் வந்து மிக முக்கிய விருந்தினர்களை இறக்கி விட்டு மீண்டும் கிழக்கு உத்திரை வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

முக்கிய நபர்களுக்கான வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் :

முக்கிய நபர்களுக்கான அனுமதி சான்று உள்ள வாகனங்கள் மாம்பழச்சாலை அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேலவாசல் வழியாக வந்து மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும். பின்னர் வடக்கு சித்திரை வீதி வழியாக வடக்கு வாசல் சென்று பஞ்சக்கரை வழியாக வெளியே செல்ல வேண்டும்.

 

இதர வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் :

இதர அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்கள் மாம்பழச்சாலை அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேலவாசல் அருகில் உள்ள மூலத்தோப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் நெடுந்தெரு மந்தை, தசாவதாரம் சன்னதி வழியாக பஞ்சக்கரை சென்று வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

குடியிருப்போர் வாகனங்கள் : உத்திரை வீதி மற்றும் சித்திரை வீதியில் குடியிருப்போருக்கான வாகனங்கள் அனைத்தும் கிழக்கு மற்றும் வடக்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும்.

காவல்துறை வாகனங்கள் : காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கீழ சித்திரை வீதி மற்றும் தெற்கு சித்திரை வீதியில் மட்டும் நிறுத்த வேண்டும்.

 

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள் :

(பேருந்துகள்) 

பேருந்துகள் பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு . "Y" ரோடு சந்திப்பு - காவல் சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.

 

(வேன்கள் - கார்கள்)

வேன்களில் வரும் பக்தர்கள் ஓடத்துறை பாலம் வழியாக, காவேரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, T.V. கோயில் ட்ரங்க் ரோடு, ஸ்ரீஹோட்டல், அம்பேத்கார் நகர், சங்கர் நகர் வழியாக சிங்கபெருமாள் கோயில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அதே வழியாக வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

இரண்டு சக்கர வாகனங்கள் :

1) மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

2) மாம்பழச்சாலை, திருவானைக்கோயில் ஜங்சன், நெல்சன் ரோடு, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி மைதானம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் பஞ்சக்கரை வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

3) கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு பஞ்சக்கரை ரோடு யாத்ரி நிவாஸ் - கொள்ளிடம் முருகன் கோவில் - தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

 

மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ)

1) மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

2) கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு யாத்ரி நிவாஸ் தசாவதார சன்னதி நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

 

மேலும் இந்த வருடம் சுமார் 3 லட்சத்திற்குமேல் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சுமார் 2000 பேருக்குமேல் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

 

போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவல் ஆளிநர்கள் போதிய அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை. மேற்கண்டவாறு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக பொதுமக்களின் நலன்கருதி, மேற்கண்ட வாகன போக்குவரத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பை நல்குமாறு மாநகர காவல் ஆணையர் ந.காமினி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision