மின் சேமிப்பு வார விழா - மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திருச்சி மின் பகிர்மான வட்டம்/ பெருநகரம் / திருச்சி சார்பில் இந்த ஆண்டு மின் சேமிப்பு வார விழா (18.12.2024) முதல் (30.12.2024) வரை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் (Road Show Vehicle) மற்றும் மகா பேரணி (Ralley) (04.01.2025) அன்று நடத்தப்படுகிறது.
மின் சேமிப்பு வார விழா" வை முன்னிட்டு மின் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் (04.01.2025) (சனிக்கிழமை) அன்று திருச்சி, தென்னூர் மண்டல அலுவலகத்தில் பொறிஞர்.A.செல்வி, மேற்பார்வை பொறியாளர், திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரம் /திருச்சி அவர்கள் காலை 10.00 மணியளவில் மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
அவரை தொடர்ந்து பொறிஞர். K.அன்புசெல்வம், செயற்பொறியாளர்/இ.கா./ லால்குடி மின் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில், துறையூர் கோட்டத்தை சேர்ந்த பொறிஞர்ராஜேந்திர குமார். இளமின் பொறியாளர்-II-ம் நிலை அவர்கள் மின் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மின் ஆத்திச்சூடி ஒன்றை எழுதி பாடலாக பாடினார்.
மின் ஆத்திச்சூடி :
அழகான கதிரொளியில் மின் விளக்கு வேண்டாம்!
ஆளில்லா அறைதனிலே மின் விசிறி வேண்டாம்!
இணையற்ற மின்சாரம்தனை திருட வேண்டாம்!
ஈடில்லா உயிர்சேதம் வேண்டவே வேண்டாம்!
உலகத்து உயிர்களுக்கு தொண்டு செய்யும் - மின்சாரம்
ஊரெல்லாம் ஒளியாக்கி வெளிச்சம் காட்டும் - மின்சாரம்
எந்நாளும் மின்சாரம் தன்னை சிக்கனம் செய்ய ஏன் இன்னும் யோசனை நாம் செய்ய வேண்டும்!
ஐயம் கொண்ட நிலையில் கம்பி தொடவும் வேண்டாம்!
ஒருபோதும் கையுறையின்றி AB சுவிட்ச் இயக்க வேண்டாம்!
ஓங்கார வாழ்வை நீயும் தொலைக்க வேண்டாம்!
ஒளடதங்கள் தேடி நீயும் அலைய வேண்டாம்!
இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மின் சேமிப்பு Banner ஒட்டிய வாகனம் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட நகரியம் சார்ந்த பகுதிகளில் மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கனம் தொடர்பான Audio ஒளிபரப்பப்பட்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மகா பேரணி (Ralley) : மின் சேமிப்பு வார விழா- -வை முன்னிட்டு 04012025 (சனிக்கிழமை) மதியம் 3.30 மணியளவில் ஜமால் முகமது கல்லூரி முன்பு பொறிஞர்.முல்லை, மேற்பார்வை பொறியாளர் / இயக்கம் / திருச்சி அவர்கள் கொடியசைத்து மகா பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள்,
நிர்வாக மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு பற்றிய பதாகைகளை ஏந்திக் கொண்டு கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியானது ஜமால் முகமது கல்லூரியிலிருந்து ஆரம்பித்து மேற்பார்வை பொறியாளர்/மன்னார்புரம் / மெட்ரோ / திருச்சி அலுவலத்தில் நிறைவு பெற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision