மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்பின்படி சற்றே குறைப்போம் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு பதிவு/உரிமம் சிறப்பு முகாம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் ஹோட்டல் அஜந்தாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 07.04.2022 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சற்றே குறைந்த சர்க்கரை, குறைந்த உப்பு, குறைந்த கொழுப்பு குறைந்த அளவில் உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் உணவு கலப்படம் பற்றி பொதுமக்களும், மகளிரும் கண்டறியும் வண்ணம் செயல் முறை விளக்கமும், விழிப்புணர்வு முகாமும் நடைபெற்றது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்கு என்று சிறப்பு பதிவு/உரிமம் முகாம் ஏற்படுத்தி அவற்றிலிருந்து FSSA பதிவுக்கான 55 பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் அனிதா அவர்கள் முன்னிலை வகித்தார். உணவு பாதுகாப்பு திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் Dr.R.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, ஸ்டாலின், வசந்தன். பொன்ராஜ் மற்றும் சையது இப்ராஹிம் ஆகியோர் இக்கூட்டத்தை நடத்தினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO