திருச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தனர்

திருச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தனர்

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட சூலகிரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைதையடுத்து திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, சென்னை, கோயமுத்தூர், திருநல்வேலி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் காணொளி காட்சி மூலம், இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்க அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அதனை வரவேற்றனர்.

இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் இத்திட்டத்தினை காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைத்ததையடுத்து, நகரப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர். பின்னர் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்கள், பயனாளிகளின் வீடு தேடி சென்று மருத்துவ பெட்டகத்தை வழங்கினர்.

முடக்குவாதத்தில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு வீடு தேடி சென்று அளிக்கப்படும் இயல்முறை சிகிச்சையினை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 2202 நபர்களுக்கு ரூபாய் 34.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn