திருச்சியில் திடீர் கோடை மழை - நேற்றைய மழையளவு விவரம்

திருச்சியில் திடீர் கோடை மழை - நேற்றைய மழையளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியிலேயே கோடை மழை தொடங்கியதுபோல் சுட்டெரிக்கும் வகையில் வெயிலும் அடித்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியே இருந்தது. இதேபோல் நேற்று காலை முதலே சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்தது. பகலில் வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், பாதைசாரிகள் வெயிலால் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. 

இந்த மழையால் திருச்சி மாநகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஒருபுறம் பெய்த மழையால் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொருபுறம் சற்று பாதிப்படைந்து மக்கள் அவதியடையவும் செய்தனர்.எதிர்பாராமல் பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றதை காணமுடிந்தது. இந்த மழையானது திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பரவலாக பெய்துள்ளது. சில இடங்களில் சாரல் மழை தூறல்போல பெய்துள்ளது.

மாணவ, மாணவிகள் அவதிமழை காரணமாக மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகளும் சற்று அவதிப்பட்டனர். சைக்கிளில் சென்ற மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள் நனைந்தபடியே வீடு திரும்ப நேர்ந்தது. மேலும் காந்தி மார்க்கெட் வியாபாரிகளும், சாலையோர வியாபாரிகளும் மழையால் பாதிக்கப்பட்டனர். திருச்சி கண்டோன்மெண்ட், பாலக்கரை, மத்திய பஸ் நிலையம், ஆழ்வார்தோப்பு, உறையூர், பீமநகர், மலைக்கோட்டை, தில்லைநகர், கே.கே.நகர். எடமலைப்பட்டி புதூர், சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இதில் திருச்சி நவலூர் குட்டப்பட்டு 12.40 மில்லி மீட்டர், பொன்மலையில் 13 மில்லி மீட்டர், திருச்சி ரயில்வே பகுதியில் 15 மில்லி மீட்டர், மழை பதிவாகி உள்ளது. மொத்தமாக திருச்சி மாநகரில் 46.40 மில்லி மீட்டர், சராசரியாக 1.93 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO