மாநகராட்சியோடு இணைய விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தவில்லை - நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

மாநகராட்சியோடு இணைய விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தவில்லை - நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார்கோயிலில் ஊராட்சி கொள்ளிடக் கரையில் மியாவாக்கி திட்டத்தில் அடர்வனக் குறுங்காடுகளில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 1.75 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார்.

பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள்ள அருள்மிகு உத்தமர் கோயிலுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலப்பரப்பில் மியாவாக்கி அடர்வான காடுகளில் திட்டத்தில் 1.75  மரக்கன்றுகள் நடும் விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

பிச்சாண்டார் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சோபனாதங்கமணி ஏற்பாட்டில் மியாவாக்கி அடர்வனக் குறுங்காடுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கொண்டு மரக்கன்று நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், ஊராட்சிமன்றத் தலைவர் ஷோபனா தங்கமணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது.. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி வரும் 13ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மாநகராட்சி, நகராட்சி விரிவாக்கத்தில் சேர விரும்பும் கிராம ஊராட்சிகள் சேர்த்துக் கொள்ளப்படும்.

மாநகராட்சியை ஓட்டிய பகுதிகளுக்கு பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாநகராட்சியோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. விரிவாக்கத்தில் இணைக்கப்பட்டாலும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முழுவதும் இருப்பார்கள் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn