விண் பதியம் முறையில் திருச்சியை பசுமையாக்கும் திட்டம் துவக்கம்

விண் பதியம் முறையில் திருச்சியை பசுமையாக்கும்  திட்டம் துவக்கம்

#My_Tree #My_Trichy என்கிற திட்டத்தின் ஒரு பகுதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் மரம் நடும் விழா நேற்று(17.09.2021) நடைபெற்றது. 

திருச்சியின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த 7 வருடங்களாக மரம் நடும் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறது ஷைன் திருச்சி அமைப்பு. இந்த அமைப்பானது திருச்சியில் உள்ள VDart நிறுவனத்துடன் இணைந்து "My_Tree #My_Trichy " என்கிற திட்டத்தை துவங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜமலை வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.  இதில் 11 மரக்கன்றுகள் ' காற்று அடுக்கு முறையில் நடப்பட்டுள்ளன. இந்த கன்றுகளை திருச்சி தேசிய கல்லூரியின் தாவிரவியல் துறை வழங்கியுள்ளது. 

இந்நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் செல்வம் , பதிவாளர் கோபிநாத், VDart நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறையின் உதவி மேலாளர் மோகன சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn