தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தீயணைப்பு வீரர்

Aug 17, 2021 - 02:40
 200
தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தீயணைப்பு வீரர்

திருச்சி தீயணைப்பு துறை சார்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் நடைபெற்றது.
வெள்ள அபாய எச்சரிக்கை குறித்தும், பேரிடர் காலத்தில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையிலான குழுவினர் தீயணைப்பு துறையில் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் தீ விபத்திலிருந்து எவ்வாறு பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒத்திகை நடத்தப்பட்டது.

அப்போது தீயணைப்பு வீரர் ஒருவரின் மீது தீ பற்ற வைத்து அதனை சக வீரர்கள் அணைக்கின்ற ஒத்திகையில் திடீரென்று அந்த வீரர் மீது அதிக அளவில் தீ பரவ ஆரம்பித்ததால் உடனடியாக அவர் எழுந்தவுடன் தீ அணைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமர்த்தியமாக செயபட்ட தீயணைப்பு வீரர் அதிர்ஷவசமாக உயிர் தப்பினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn