டிரைக்கோகிரெம்மா அட்டை பயன்படுத்தி செயல்விளக்கம் அளித்த இறுதியாண்டு மாணவிகள்.

டிரைக்கோகிரெம்மா அட்டை பயன்படுத்தி செயல்விளக்கம் அளித்த இறுதியாண்டு மாணவிகள்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் கத்திரிக்காயில் தண்டு மற்றும் காய் துளைப்பான் கட்டுபடுத்துவதற்காக டிரைக்கோகிரெம்மா அட்டை பயன்படுத்தி செயல்விளக்கம் அளித்த காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்கலை வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள்.

மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் விசாலினி, விக்னேஷ்வரி, அபிநயா, கயல்விழி, ரேணுகா தேவி ஆகியோர் கத்திரிக்காயில் தண்டு மற்றும் காய் துளைப்பான் கட்டுபடுத்துவதற்காக டிரைக்கோகிரெம்மா அட்டை பயன்படுத்தி செயல்விளக்கம் அளித்தனர். டிரைகோகிரெம்மா என்பது ஒரு முட்டை ஒட்டுண்ணி. இது கத்திரிக்காயில் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டு மற்றும் காய் துளைப்பானை கட்டுபடுத்துகிறது.

தண்டு மற்றும் காய் துளைப்பான் கத்திரி செடியில் சொத்தை கத்திரிக்காய் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. டிரைக்கோ அட்டையில் முட்டை பருவத்தில் இருக்கும் டிரைக்கோகிரெம்மா அதிலிருந்து பூச்சியாக வெளிவந்து தண்டு மற்றும் காய் துளைப்பானின் முட்டையை தாக்குகிறது. இதனால் முட்டையிலிருந்து புழுவாக வந்து கத்திரிக்காயில் சேதம் ஏற்படுவதை தவிர்கலாம் மற்றும் மகசூலை அதிகரிக்கலாம். கத்திரிக்காய் மட்டும் இல்லாமல் புழுக்கள் தாக்கும் அனைத்து பயிர்ளுக்கும் பயன்படுத்தலாம்.மேலும் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி (Trichogramma ) பயன்படுத்தும் முறை 

 

1.டிரைக்கோகிரம்மா அட்டையை 5 வரிகளாக கிழித்து , ஒரு வரியை இலை கீழ் வைத்து ஸ்டேப்லர் அடிக்க வேண்டும். இதே முறையில் வயல் முழுவதும் டிரைக்கோகிரம்மாவை இடைவெளை விட்டு பரவலாக நிலத்தில் வைக்க வேண்டும். இதை வைத்த பிறகு பூச்சிகொல்லியை 15 நாட்கள் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் டிரைக்கோகிரம்மா இறந்துவிடும்.

15 நாட்களுக்கு ஒரு முறை மீண்டும் டிரைக்கோகிரம்மாவை பயன்படுத்த வேண்டும். டிரைக்கோகிரம்மாவை இலவசமாக பெற விவசாயிகள் சிஐபிஎம்சியை அணுகலாம் என மாணவிகள் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision