மாநகராட்சி உடன் இணைய விருப்பமில்லாதவர்கள் பற்றி அமைச்சர் நேரு பேட்டி
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளை பராமரிப்பதற்கு மருத்துவ உதவிகள் அளிப்பதற்கான 9 நடமாடும் கால்நடை மருத்துவ உதவி வாகனங்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அந்த வாகனங்களின் சேவையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியை செய்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்...... மாநகராட்சி பகுதியில் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் திறக்கப்படும். ஒப்பந்தம் கேட்பவர்கள் மிக குறைவான விலை நிர்ணயம் செய்வதால் காலதாமதம் ஆகிறது விரைவில் அது திறந்து வைக்கப்படும்.
மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் நடப்பதில் தற்போது தய்வு ஏற்பட்டுள்ளது அதற்கு காரணம் ரயில்வே நிர்வாக திட்டமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டும் என்பதால் அது காலதாமதம் ஆகிறது. தமிழக அரசு பாலத்தை கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் இடம் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார் விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றார்.
இம்மாதம் புதிய பேருந்து முனையம் தொடங்குவதாக கால அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால் கூடுதலாக 100 கோடி ரூபாய் காண ரிவைஸ்டு எஸ்டிமேட் போடப்பட்டு அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெறுகிறது டிசம்பருக்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் மிக முக்கியமாக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உணவகங்கள் போன்றவை அத்தியாவசியமானதாக உள்ளது எனவே மழைக்காலம் முடிந்தவுடன் இந்த பணிகள் நிறைவடையும்.
பருவமழை தொடங்கிய நிலையில் என்ன முன்னேற்பாடுகள் நடைபெற்று உள்ளது என்பது குறித்து தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் அமைச்சர் உதயநிதியின் தலைமையில் ஐந்து துறைகளை சார்ந்த அமைச்சர்களும் கோடி ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் எந்தெந்த பகுதிகளில் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த பணிகளை செய்கிற உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் வருகின்ற நான்காம் தேதி மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது விடுபட்டுள்ள ஒரு சில இடங்களில் ஆகாயதாமரை அகற்றும் ன பணி நடைபெற்று வருகிறது. விடுபட்டுள்ள இடங்களில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 22 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது அந்த இயந்திரங்கள் மூலம் அனைத்து கால்வாய்களிலும் வருவதற்கு அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் அளவிற்கு திருச்சி மட்டுமல்ல திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் பகுதிகள் தாங்கக்கூடிய அளவிற்கு முன்னேற்பட்ட மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 முதல் 25 சென்டிமீட்டர் மழை பெய்தால் நாம் தாக்கு பிடிக்கும் அளவிற்கு தயாராக உள்ளோம்.
50 சென்டிமீட்டர் 40 சென்டிமீட்டர் மழை பெய்தால் அதையும் நாம் சமாளிப்போம் இருப்பினும் கணேசா சப்வேயில் மட்டும் தண்ணீர் தேங்கி இருப்பதால் அவற்றை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற சப்வேக்கள் சுத்தமாக தயார் நிலையில் உள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்திற்கும் மாநகராட்சி காண துறையில் இருந்து அனைத்து நிதிகளும் ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக எழுதிய கேள்விக்கு பதில் அளித்தவர் யார் விருப்பப்படுகிறார்களோ அவர்கள் திருச்சி மாநகராட்சியுடன் வந்து இணைந்து கொள்ளலாம் நாளுக்கு நாள் மாநகராட்சியின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது அதேசமயம் வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே ஊராட்சி புத்திகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே பொதுமக்கள் வந்து குடியேறுவதற்கு ஏதுவாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்க அரச முடிவு செய்துள்ளது. நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை பொறுத்தவரை சமயபுரம், மன்னச்சநல்லூர், மாந்துறை, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளனர். அதில் இரண்டு கிராமங்களை மட்டும் சேர்க்க வேண்டாம் என்று கூறினார்கள் அதை வேண்டாம் என்று நாங்கள் நிராகரித்து விட்டோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள நாங்கள் தயாராகி விட்டோம். இன்று நடைபெற்ற கட்சி செயல் வீரர்கள் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம் நிச்சயம் 200 தகுதிகளை கைப்பற்றுவோம்.
நெல்லை மேயர் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அது அண்ணன் தம்பிக்குள் ஏற்படக்கூடிய பிரச்சனை அதை அவர்கள் பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்று பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision