ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை, காவல்துறையினர் தடுத்ததால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை, காவல்துறையினர் தடுத்ததால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை வேண்டியும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய அரசை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர வேண்டியும்,

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய கிராமங்கள் தோறும் விற்பனை மையங்கள் அமைக்க வலியுறுத்தியும், டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளும், போராடும் விவசாயிகளை தாக்கும் மத்திய அரசு கண்டித்தும்,

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், காவல்துறையினர் தடுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision