BVM குளோபல்  பள்ளியில் இணையவழியில் நடைப்பெற்ற செயல்திட்ட தின நிகழ்ச்சி

BVM குளோபல்  பள்ளியில் இணையவழியில் நடைப்பெற்ற செயல்திட்ட தின நிகழ்ச்சி

BVM  குளோபல்  சிபிஎஸ்இ பள்ளியில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடைய  நுண்ணறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் ப்ராஜக்ட் டே ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

  பத்தாம் ஆண்டை முன்னிட்டு  இன்றைய தினம் விண்வெளி என்ற தலைப்பின் கீழ் மாணவர்கள் தங்களுடைய படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

இணைய வழியில் நடைபெற்ற இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக Mariners International pvt.Ltd நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் வெங்கடேசன்  கலந்துகொண்டு  விண்வெளி துறை சார்ந்த மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததோடு அவர்களை ஊக்கப்படுத்தவும் செய்தார்.

  சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள், வானில் இயங்கும் பொருள்கள், பிரபஞ்சம், செயற்கைக்கோள், விண்வெளி நிலையம், தட்பவெட்பநிலை மாற்றம், ஒலிமாசு, எந்திரவியல் பற்றிய தகவல்கள்மேலும்
 பெருவெடிப்புக் கோட்பாடு ஈர்ப்பு விசை போன்றவற்றை மாணவர்கள் தங்களுடைய சிறுவயதிலிருந்தே  விண்வெளி அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் 
இதுபோன்ற செயல்பாடுகள் அமைகின்றது.


 ஆராய்ச்சியாளர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த நேர்காணல்  உருவாக்கித் தரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் செயல் திட்டம்  தினம் மாணவர்களினை சிறப்பாக செயல்பட  தொடர்ந்து நடத்தி வருகிறது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn