திருச்சி மாநகரில் 11 பேர் அதிரடியாக கைது
திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பெயரில் மாநகர முழுவதும் அந்தந்த சரகங்களில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர்.
திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக வடக்கு ஆண்டாள் விதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற வாலிபரை கைது செய்தனர். இதேபோல் தில்லைநகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ஹமீது என்கிற வாலிபரை மாநகர மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் திருச்சி பாலக்கரை, திருவரங்கம், கோட்டை, தில்லை நகர், உறை யூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட் டுகள் விற்றதற்கான ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் திருச்சி உறையூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஹான்ஸ், கூலிப் ஆகியவை விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து உறையூர் காவல்நிலைய ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் ராமலிங்க நகர் பகுதியில் ஒரு கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நூற்றுக்கணக்கான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜெயச்சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision