திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் - தகவல் தெரிவிக்க காவல்துறை வேண்டுகோள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் - தகவல் தெரிவிக்க காவல்துறை வேண்டுகோள்

கண்டோன்மென்ட் காவல் நிலைய சரகத்தில் இன்று அதிகாலை சுமார் 03-00 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் TTC பஸ் நிறுத்தம் டீ கேன்டீன் வடபுறம் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கூறி உடன் வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர் விழுந்து கிடந்தவரை பரிசோதித்ததில் இறந்து விட்டதாகவும் கூறியதின் பேரில் உதவி ஆய்வாளர் அவர்களின் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரேதத்தை திருச்சி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்தவர் பெயர் விலாசம் தெரியவில்லை  சுமார் 45 வயது சிகப்பு கலர் டீ சர்ட் கட்டம் போட்ட ஊதா கலர் கைலி பச்சை கலர் டிராயர் ஜட்டி  வலது கையில் சிவப்பு கருப்பு மஞ்சள் கலர் கயிறு கட்டியுள்ளார். சுமார் 5. 1/2 அடி உயரம் கருப்பு நிறம் தாடி திடகார்த்தமான உடல் தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் கண்டோண்மெண்ட் Ps Phone No. 0431-2460692க்கு தெரிவிக்கவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn